ஆஸ்திரேலிய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு சில நாட்களாகவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு அவரின் அலுவலக பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “எனக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே பரிசோதனை செய்தேன். இந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றில் இருந்து அடுத்த வாரம் குணம் அடைவேன் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.