Categories
மாநில செய்திகள்

மார்ச் 8-ல் பெண்களுக்கு இலவசம்… மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு….!!!

மகளிர் தினத்தையொட்டி அனைத்து பயணிகளுக்கும் இலவச பயணத்தை வழங்குவதாக மெட்ரோ நிறுவனம்  அறிவித்துள்ளது

பெண்கள் தங்களின் வாழ்வில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்கின்றனர்.  இத்தகைய பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றும் வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என  கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் வரம்பற்ற இலவசப் பயணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் மார்ச் 8 ம் தேதி 10 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண் ஊழியர்கள் மட்டுமே நிலைய கட்டுப்பாட்டாளர்களாக  இருப்பார்கள் என்றும், அன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிலையமும் இதனை பரிசீலிக்கலாமே என கூறப்படுகிறது.

Categories

Tech |