Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தேவையான மளிகை பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். இதையடுத்து வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மாதம்தோறும் அத்தியாவசிய பொருள்களை வெளிமாநில ரேஷன் கடைகளில் பெற்று வருகின்றனர்.

இருப்பினும் ரேஷன் கடைகளில் சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. தரமற்ற பொருட்கள், பொருட்களின் எடை சரியாக இருப்பதில்லை என புகார்கள் குவிந்துள்ளது. அதேபோல் குறைவான எண்ணிக்கையில் பொருள்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களை கருத்தில் கொண்டே இந்த ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களும் தற்போது இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்காக ரேஷன் கார்டில் புதிய விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது எலக்ட்ரிக் எடை எந்திரம் அனைத்து ரேஷன் கடைகளிலும் வைக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த இயந்திரம் மூலமாகவே உணவு தானியங்கள் வழங்கப்படும். இதையடுத்து உணவு விநியோகத்துக்கும், பொது மக்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்கள் மட்டுமே பயன் பெற முடியும். இதுபோன்ற விதிமுறைகள் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை களையவே கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |