மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமணத்தில் நடக்கும் விசயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவது வழக்கம். இப்படி சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்து வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாலை மாற்றிய பின் மணமகன் தன் மனைவிக்கு இனிப்பு வழங்கியுள்ளார்.
அப்போது அதை மணமகள் வாயில் வாங்க மறுத்துவிட்டார். இதனால் கடுப்பான அந்த மணமகள் அந்த இனிப்பை அவர் மீது வீசி விட்டார். இதனால் மணமகன் கடுப்பாகி மீண்டும் அதை எடுத்து தன் மனைவி மீது ஏறிந்துவிட்டார். மேலும் கடுப்பான மாப்பிள்ளை கோபத்தில் மணமகளை போட்டு அடித்து உதைத்து விட்டார். இச்சம்பவத்தால் மண்டபமே பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.