பணம் திருடியதாக ஒருவர் அளித்த புகாரால் மனவேதனையிளிருந்த நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மறைஞாயநல்லூர் பனங்காடு பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியான உதயராசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் அருந்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உதயராசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயராசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் உதயராசன் பணம் திருடியதாக காவல்நிலையத்தில் ஒருவர் புகார் அளித்ததாகவும், இதனால் மனவேதனையிலிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.