தமிழகத்தில் இன்று புதிதாக 348 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 53,132 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நோய் தொற்று பாதிப்பு 348 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நோய் தொற்றிலிருந்து 1,025 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 34,06,649 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 38,006 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி நோய் தொற்று காரணமாக 5,066 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.