லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகைபுயல் வடிவேலு. இவரின் நகைச்சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும். மீம்ஸ் என்றாலே இவரின் நகைச்சுவை இல்லாமல் இருக்காது. பல திரைப்படங்களில் நடித்த இவர் இடையில் சிறிது காலம் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரீ என்ட்ரியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தை பல நகைச்சுவை படங்களை தந்த இயக்குனர் சுராஜ் இயக்குகின்றார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்வதாக படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது.
இந்நிலையில் லைக்கா நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் சில மன வருத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்காக மைசூரில் படக்குழு பிரம்மாண்டமாக செட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு பட்ஜெட் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட்டை குறைக்குமாறு கூறியுள்ளது. இதற்கு வடிவேலு படம் நன்றாக ஓட வேண்டும் என்றால் செலவு செய்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் லைகா நிறுவனம் சிறிது கவலையில் உள்ளது. ஆனால் ரசிகர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் படம் நன்றாக இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.