Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான சூப்பர் தகவல்…!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான  தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் அண்மையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரி கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் 1968ஆம் ஆண்டு முதலே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசால் ஓய்வூதியம் வழங்கப்பட்டு  வருகிறது. இதில்  ஓய்வூதியத் தொகையாக 20,000 என தொடங்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே ஓய்வு தொகை உயர்த்தப் பட்டது.

இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பெற்று வந்த ஓய்வூதியம் 2004 முதல் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மேலும் 2004 ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்  மற்றும் அரசு ஊழியர்கள் நலன் மற்றும் அரசின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது. எனவே  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

Categories

Tech |