தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அதன்படி பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிக விடுமுறைகள் வந்த காரணத்தால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் பிப்ரவரி மாதம் அந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. அத்துடன் அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான தேதிகள் நாளை (மார்ச்.2) காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.