லதா ரஜினிகாந்தின் செயலால் பயங்கர கோபம் அடைந்த நடிகர் தனுஷ்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கு ஐஸ்வர்யா பிடி கொடுத்தாலும் நடிகர் தனுஷ் இறங்கி வருவதாக தெரியவில்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் ரஜினி இருவரின் விவாகரத்து காரணமாக மிகுந்த கோபத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து வந்தார். இதனால் தான் தனுஷுடன் மீண்டும் சேர முடிவெடுத்து ஐஸ்வர்யா கஸ்தூரி ராஜா மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை என்றும் தெரியவந்தது. தனுஷின் இந்த செயலால் லதா ரஜினிகாந்த் அவரின் மீது உச்ச கோபம் அடைந்துள்ளார். மேலும் அவர் தனுஷுக்கு எதிராக சினிமா வட்டாரங்களில் பல கருத்துகளை பேசி வருவது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் சிலர் தமிழ் சினிமாவின் தனுஷிற்கு இருக்கும் செல்வாக்கை அசைத்துப் பார்க லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து வருவதாக கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த விஷயம் அறிந்த தனுஷ் லதா ரஜினிகாந்த் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.