மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை குபேர லட்சுமி அரங்கில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீச்சல் போட்டி சங்க தலைவர் சஞ்சீவ் குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி. ராஜேந்திரன் நீச்சல் போட்டியினை தொடங்கி வைத்துள்ளார். இந்த நீச்சல் விழா 6 பிரிவுகளில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவிகள் வந்து கலந்து கொண்டுள்ளனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு பரிசுகளை வழங்கியுள்ளனர். இந்த நீச்சல் போட்டியை எஸ். ரமேஷ் என்பவர் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் விளையாட்டு அரங்க பொருளாளர் நந்தகோபால், பயிற்சியாளர் விஜீஸ், வேளாளர் கல்லூரி தாளாளர் எஸ்.டி சந்திரசேகர், சூர்யா பொறியியல் கல்லூரி தாளாளர் கலைச்செல்வன், அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குனர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்,