டெல்லி மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது, “டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்களுக்கு கௌரவ ஓய்வூதியம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக வழங்கப்படுவதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு பொய் கூறுகிறது.
தமிழகத்தில் முறையே அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளரின் கவுரவ ஊதியங்கள் 12,200 ரூபாய் மற்றும் 8,650 ரூபாய் ஆகும். டெல்லியை விட தமிழகத்தில் தினசரி தேவைகளுக்கான செலவு குறைவு.
அவ்வாறு இருக்கையில் டெல்லி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை எவ்வாறு போதுமானதாக இருக்கும்.” எனக் கூறினார். இதனை தொடர்ந்து தற்போது டெல்லி மாநில அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 12,720 ரூபாயும் உதவியாளர்களுக்கு 6,810 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த அங்கன்வாடி பணியாளர்கள், இது யானை பசிக்கு சோள பொறி தருவது போல் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.