சேலம் மாவட்டத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவருக்கு அடிக்கடி இடமாறுதல் கொடுத்ததால் மனவிரக்தி அடைந்த அவர் நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார்.
இதில் நீதிபதிக்கு நெஞ்சில் சிறிது காயம் ஏற்பட்டது. இதனால் நீதிபதி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.