Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (09.01.20) முழு ராசி பலன்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! முன்னர் செய்த உதவிக்கு நல்ல பலன் இன்று தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகிச் செல்லும். பெண்கள் நகை புத்தாடை வாங்குவீர்கள். இன்று மறைமுகமாக உங்களை குறை சொன்னவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள்.

காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு சிறு முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்து விஷயமும் சிறப்பாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுப்பதாக இருக்கும். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகும். பணச் செலவில் சிக்கனம் அவசியம். தொழிற்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். தனது தோரணையை வெளிப்படுத்தக் கூடிய சூழல் இருக்கும். நல்ல பொருளாதாரம் அதேபோல செல்வாக்குமிக்க நண்பர்கள் போன்றவை இன்று அமையக்கூடும்.

நன்மைகள் அதிகமாகத்தான் இன்று நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கி நிற்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் செய்தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூட எந்த பிரச்சினையும் இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் அனுபவ அறிவு புதிய நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக இருக்கும். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். மாமன் மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுனக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கும் தருணமாக இன்றைய நாள் அமையும். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

சுப விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அது மட்டுமில்லாமல் செலவுகளும் கொஞ்சம் இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.

மாணவக் கண்மணிகள் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதை ஆசிரியர்களிடம் தெளிவாக தெரிந்துகொண்டு கேட்டு அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு படிப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை  மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் சொந்த நலனில் அக்கறை வளரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதம் ஆகலாம். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். இன்று சிலர் மேல் அதிகாரி  அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்கள். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேலை பெறுவார்கள். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம்  ஒன்று சேருவார்கள்.

வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களை இன்று காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு  உண்டான வேலைகளை இப்பொழுது ஆரம்பிக்கலாம். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். ஆலயம் சென்று வாருங்கள். நிம்மதியாகவே இருப்பீர்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.

ஆசிரியர்களிடம் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தைரியமாக எழுந்து நின்று கேட்டு தெரிந்து கொண்டு பாடங்களை படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் சொந்த நலனை தியாகம் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். இன்று உடல் நலத்தை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும்.

உத்தியோகத்தில் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையக் கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவிகளும் கிடைக்கும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் பாடங்களைப் படிக்கும்போது நிதானத்துடனும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் இறங்குங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக முடிப்பீர்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தெய்வீக சிந்தனை வளரும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் உயரும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும். வாழ்க்கை துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும் மனம் மகிழ்ச்சி கொள்ளும். அதே போல வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழலும் இருக்கும். தெய்வீக நம்பிக்கையும் கூடும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் இளம் சிவப்பு நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உதவி கிடைக்க கொஞ்சம் தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாக பணிபுரிவீர்கள். பணவரவில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் சிறிது சிரத்தை எடுத்தால் பெரிய வெற்றி பெறலாம்.

அனைத்திலும் நினைத்த மதிப்பெண் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பித்தம் மயக்கம் போன்ற உபாதைகளும் நீங்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனம் வேண்டும். கவனமாக வேலையை செய்யுங்கள். ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் ஒருமுக தன்மையுடன் செயல்பட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான வளர்ச்சிதான் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் அவசியம் ஆகையால் பேச்சில் மட்டும் நிதானமாக இருங்கள். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு கடுமையாக உழைப்பீர்கள். இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை தான் இருக்கும். உடல்நலம் ஓரளவு சீராக தான் இருக்கும்.

உடல் அசதி சோம்பல் நீங்கும். மருத்துவ செலவு குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். அதேவேளையில் செலவு கொஞ்சம் அதிகரிக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சிக்கனமாக எதையும் செய்யுங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள் அது போதும். மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படுவார்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய  அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிரமங்களை வெல்லும் திறன் அறிவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக தான் இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று மனைவி வழியில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் அது நொடிப்பொழுதில் சரியாகிவிடும். அதற்காக அவர்களிடம் நீங்கள் வாக்குவாதம் ஏதும் செய்ய வேண்டாம்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கியே இருங்கள். அது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படுவதற்கு இறைவழிபாட்டை தொடர்வது ரொம்ப சிறப்பு. பிள்ளைகளால் பெருமை காணலாம். அதேபோல மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படியுங்கள்.

படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப் பாருங்கள். சந்தேகம் ஏதேனும் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினரிடம் உங்கள் மீதான மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் செழிக்க சில சீர்திருத்தம் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். அக்கம்பக்கத்தார் இடம் இருந்து வந்த கசப்பு உணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தான பாக்கியம் கிடைக்கும்.

புதிய வீடு மனை வாங்க தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அதிக வேலைப்பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாகவே செய்வீர்கள். அலைச்சல்கள் கொஞ்சம் வரக்கூடும், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் நிதானத்தையும் அதுமட்டுமில்லாமல் பொருட்கள் மீது கவனத்தையும் ஈர்ப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள்.

பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர்நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சுய பெருமை பேசுவதால் சிலர் அதிருப்தி கொள்வார்கள். தொழில் வியாபார நடைமுறை சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். இன்று தூங்குவதற்கு தாமதமாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரணையாக இருப்பார்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நீங்கள் திறமையாக செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பு செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாகத்தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் மாணவக் கண்மணிகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கல்வியில் முன்னேறி செல்வார்கள்.

நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில்  ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முழு மனதுடன் பணிபுரிவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். அளவான பணவரவு தான் கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். தெய்வ வழிபாடு மனதை சாந்தமாக  உருவாக்கும். இன்று புதிய தொழிலை ஆரம்பித்தவர்களுக்கு முதலீடுகளை திரும்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தை அள்ளி கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள் கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். சுணங்கி நின்ற காரியமும் சிறப்பாக நடக்கும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த காரியமும் சிறப்பாக இருக்கும். மனதில் நீங்கள் நினைத்தது நல்லபடியாகவே நடக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கலும் ரொம்ப சிறப்பாக நடக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |