Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்…. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை….!!!!!

தமிழகத்தில் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று(மார்ச்.1) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதை ஸ்டாலின் தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று(மார்ச்.1) காலையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 69வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா கருணாநிதி நினைவு இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தமிழக முதலமைச்சராக முதல் முறை ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |