Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. 91 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 91 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பு சாலையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பையில் இருந்த சுமார் 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை வைத்திருந்த காந்திநகரை சேர்ந்த செல்வ களஞ்சியம் என்பவரையும் பிடித்து ராமேஸ்வரம் நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |