Categories
தேசிய செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை…!! தாயின் கள்ளக்காதலன் கைது…!!

கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது 6 வயது மகனுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கபீர் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கபீர் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கபீர் அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அந்த பெண் வேலைக்கு சென்றதால் அவருடைய ஆறு வயது மகனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் கபீர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் வேலைக்கு சென்ற தன்னுடைய தாய் வீடு திரும்பிய பிறகு இது குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கபீர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |