ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் ரஷ்யாவை இறங்கி வரச் செய்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்காக இருநாட்டு குழுவினரும் பெலாரஸ் வருகை தந்துள்ளனர். இது இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று போர் முடியும் என உலக நாடுகள் அனைத்தும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றன.