ஹோமில் தங்கிப்படிக்கும் 150 மாணவர்களை அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித் வெறித்தனமான காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை வலிமை படத்தின் ரிலீசை திருவிழாபோல் கொண்டாடினார்கள். சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அந்த வழியாக வந்த பால் வண்டியில் இருந்த தயிரை பால் என நினைத்து திருடிச் சென்று அபிஷேகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 நரிக்குறவ இன குழந்தைகளுக்கு நகரிலுள்ள சண்முகா திரையரங்கில் Gods children என்னும் பெயரில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரபஞ்சு சிட்டி அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து இந்நிகழ்வை ஒருங்கிணைந்த அஜித் ரசிகரான மோகன் கூறும்போது, ஜாலி ஹோமில் தங்கிப் படித்து வரும் குழந்தைகள் திரையரங்கு சென்று படம் பார்க்க ஆசைப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் பணிபுரிகின்ற அஜித் ரசிகர் தர்ஷா இதற்கான முழு செலவையும் ஏற்பதாக தெரிவித்தார். மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் செலவானது குழந்தைகளுடன் படம் பார்க்க அழைத்து வந்து அவர்களின் சந்தோஷத்தில் நாங்களும் பங்கேற்றோம் கூறியுள்ளார் . ஒருசில அஜித் ரசிகர்கள் தயிரை திருடி சர்ச்சைகள் எழுந்த நிலையில்,ஹோமில் தங்கிப் படித்த குழந்தைகளை வலிமை படத்திற்கு அஜித் ரசிகர்கள் அழைத்து வந்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.