உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைனில் வேலை செய்துவரும் இந்தியர்கள் மற்றும் உக்ரைன் நாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் லட்சக்கணக்கானவர்களை மீட்பது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். எனினும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இவர்களை மீட்க இந்திய அமைச்சர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப உள்ளதாகவும் அதன் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி உயர்நிலை கூட்டத்தை கூட்ட உள்ளார் எனவும் அதற்காக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.