தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் அரசியல் மற்றும் கட்சி சம்பந்தமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வது இல்லை. விஜயகாந்தின் இந்த முடிவால் பலர் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் தேமுதிக அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது .அதிமுக மற்றும் திமுக அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்த தேமுதிக தற்போது நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவிற்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.
வெறும் 35 வேட்பாளர்கள் மட்டுமே தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற 35 உறுப்பினர்களும் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடையாளமே தெரியாதவாறு மாறியுள்ளார். மிகவும் மெலிந்து தோற்றத்துடன் காட்சியளிக்கும் விஜயகாந்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.