Categories
உலக செய்திகள்

பேச்சி வார்த்தைக்கு தயார்…. ஆனா அங்க வரமாட்டோம்…. உக்ரைன் அதிபரின் அதிரடி முடிவு….!!

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். 

ரஷ்யா உக்ரேன் மீது நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் பெலாரஸில் வைத்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு முதலில் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்தது. அதற்குப் பின்னர் ஒப்புக்கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இந்த விவகாரத்திற்கு மாற்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர்  கூறியதாவது. “பெலாரஸ் நகரம் ரஷ்யாவின் படையெடுப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றால் அதில் பங்கு கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் பங்கேற்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |