தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி இன்று (பிப்.28) வெளியிடுகிறாா். சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் இன்று (பிப்..28) மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். இதையடுத்து திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு முன்னிலை வகிக்கிறாா்.
அதனை தொடர்ந்து நூலை ராகுல் காந்தி வெளியிட, கேரள முதல்வா் பினராயி விஜயன் அதை பெற்றுக் கொள்வார். ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா, பிகாா் மாநில எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், கவிஞா் வைரமுத்து, நடிகா் சத்யராஜ் போன்றோர் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன்பின் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றுவார். பிறகு சென்னை சத்தியமூா்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.