டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மார்ச் 23-ஆம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைகிறது.
இதனால் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும். மேலும் ஓடிஆர் கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.