Categories
உலக செய்திகள்

இது சாத்தியமா … ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்…. சாதனை படைத்த பிரபல நாடு ….

சீனா நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

சமீப காலமாக விண்வெளித் திட்டதின் மூலம் சீனா பல்வேறு சாதனைகளை படைத்து வந்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு  அனுப்பி உள்நாட்டு சாதனை படைத்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.06 மணிக்கு  மார்ச் 8 ம் தேதி ராக்கெட்டில் 2 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள்கள் அனைத்தும் புதிய பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தபட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் ரிமோட் சென்சிங் சேவைகள், கடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, காட்டுத் தீ தடுப்பு மற்றும் பேரிடர் ஆகியவற்றிக்கு  பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |