இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் நேற்று நடைபெற்றுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2 ஆவது போட்டி தர்மசாலாவில் வைத்து நடைபெற்றுள்ளது. அதிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3 ஆவது போட்டி நேற்று நடைபெற்றுள்ள நிலையில் டாஸ்ஸை இலங்கை அணி வென்றுள்ளது.
இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன் பின்பு பேசிய ரோகித் சர்மா நாங்கள் விரும்பியது போலவே பந்துவீச்சு முதலில் தங்களுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 147 ரன்கள் என்ற இலக்கை 16.5 ஓவரில் எட்டியுள்ளது. இதில் ஸ்ரேயஸ் 73 ரன்களும், ஜடேஜா 22 ரன்களும் எடுத்துள்ளார். இவ்வாறு இருக்க 3 ஆவது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.