Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சர்வர் பிரச்சனை…. பொதுமக்கள் அவதி…. பணியாளர்களின் வேண்டுகோள்….!!

ரேஷன் கடையில் சர்வர் பிரச்சினையால் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் கார்டு விவரங்கள், விரல் ரேகை மூலம் விற்பனை இயந்திரங்கள் பதிவேற்றம் செய்து பொருட்கள் வழங்கும் போது இயந்திரம் பழுதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது. இது பற்றி ரேஷன் ஊழியர்கள் வட்டார மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மாற்றாக பயனீட்டாளர்களிடம் கையெழுத்து பெற்று பிராக்ஸி முறையில் பொருட்களை வழங்க உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊழியர்கள் பணி செய்வதற்கு பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளராக எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது, தினமும் பொதுமக்கள் ரேஷன் கடை திறந்தவுடன் பொருட்கள் வாங்க வரும் போது மிஷினில் நெட்வொர்க் மற்றும் சர்வர் பிரச்சினை காரணமாக வினியோகம் செய்ய முடியவில்லை.

இதனால் பொதுமக்கள் பலர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஆதலால் உடனடியாக 2ஜி சிம் கார்டுக்கு பதிலாக 4ஜி சிம் மாற்றி தர வேண்டுமெனவும், கடைகளில் மோடம் வைத்து தருமாறும், சர்வர் பிரச்சனை சரி செய்து தருமாறும் அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக சர்வர் பிரச்சினையை தீர்த்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |