துலாம் ராசி அன்பர்களே..!! சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். அரசு காரியங்களில் இழுபறியாக இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். இன்று எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம் மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய இருக்கும்.
எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதேபோல அனைத்து விஷயங்களையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்து செய்வது ரொம்ப நல்லது. முடிந்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள், ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கல்வியில் முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத்துறையில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்