சுரங்கப்பாதையில் திடீரென தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு அருகில் நடைமேடை அமைந்துள்ளது. இந்நிலையில் 2-வது நடைமேடை மற்றும் 3-வது நடைமேடைக்கு பயணிகளின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த சுரங்கப்பாதை அடைக்கப்பட்டது. இதனால் பயணிகள் இந்த நடைபாதைகளுக்கு செல்வதற்கு மேம்பாலத்தை பயன்படுத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுரங்கப் பாதையை ரெயில்வே நிர்வாகம் திறந்துள்ளது. இந்நிலையில் அந்த சுரங்கப் பாதையில் திடீரென தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த சுரங்கப்பாதையில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.