Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகாத வார்த்தைகளால் திட்டி….. பெண் ஊழியர்களை சிறை வைத்த கிராம நிர்வாக அலுவலர்…. போலீஸ் விசாரணை…!!

கிராம நிர்வாக அலுவலர் பெண் ஊழியர்களை தாலுகா அலுவலகத்திற்குள் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் ஜோசப் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை தாலுகா அலுவலகத்தில் இருக்கும் சர்வே பிரிவில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சாரதா பணியில் இருந்த போது துலுக்கர் குளம் கிராம நிர்வாக அலுவலரான சூரிய தேவன் என்பவர் அங்கு சென்று ஒரு ஆவணம் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அந்தப் பிரிவில் வேலை பார்க்கும் ஊழியர் விடுமுறையில் இருப்பதால் அவர் வந்த பிறகு கேட்டுக் கொள்ளுங்கள் என சாரதா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சூரியதேவன் சாரதாவை தகாத வார்த்தைகளால் திட்டி அலுவலக கதவை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சாரதா உள்பட பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் சிறை வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பிற ஊழியர்கள் கதவை திறந்து பெண் ஊழியர்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து சாரதா நெல்லை சந்திப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன் கூறும்போது, பெண் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த கிராமநிர்வாக அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. நல்ல தாசில்தார் அறிக்கை சமர்ப்பித்த உடன் சூரியதேவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |