ஆதரவற்ற குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மணியக்காரன்பட்டி பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கருணை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் சமையல் செய்பவர்கள் 6 மாத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென கூறியுள்ளனர். இந்த மருத்துவ முகாமிற்கு வட்டார மருத்துவ அதிகாரி செல்லமுத்து தலைமை தாங்கியுள்ளார்.