Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பூஜா ஹெக்டே…. “இவரின் Fan-ஆ”…. யார் அவர்?…. நீங்களே பாருங்க….!!

முன்னணி நடிகை பூஜா ஹெக்டே தனது இணையதளத்தில் கமல் குறித்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இந்நிலையில் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை நெல்சன் தீலிப்குமர் இயக்குகின்றார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அவரின் ட்விட்டர் பதிவில் நடிகர் கமல் குறித்தும் அவரின் விஸ்வரூபம் திரைப்படம் குறித்தும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு கமல் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

Categories

Tech |