Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… 100 கோடியைத் தட்டித் தூக்கியது… படக்குழு ஹேப்பியோ ஹேப்பி…!!!

அஜித்தின் வலிமை படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை.

இப்படம் ரிலீஸான முதல் நாள் சென்னையில் மட்டும் 1.82 கோடி வசூல் செய்திருக்கிறது. பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளைப் புரிய இருக்கின்றது. வெளியாகிய மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடியைத் தாண்டி இருக்கின்றது. வலிமை அமெரிக்காவில் மட்டும் 300,000 டாலர்களுக்கு மேல் வசூலித்திருக்கிறது. மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வசூலை அள்ளி வருகின்றது. இவ்வளவு வசூலை பார்த்த படக்குழு சந்தோஷத்தில் உள்ளனர்.

Categories

Tech |