தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குழந்தைகளை காரணம் காட்டி ரஜினி மனம் மாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக அனைவரும் முயற்சித்து வருகின்றனர். இதில் குறிப்பாக ரஜினி தீவிரமாக முயற்சித்து வருகின்றார். குறிப்பாக மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவிற்காக சேர்ந்து வாழுங்கள் அவர்களை விட உங்களுக்கு சந்தோசம் முக்கியமாப் போச்சா.? அவர்களுக்காக நீங்கள் இணைய வேண்டும் என ரஜினி கூறுகின்றாராம்.
ரஜினி கூறியதற்கும் முதலில் இருவரும் சம்மதிக்காத நிலையில் தற்போது இருவரும் மனமாறியுள்ளனர். குழந்தைகளுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறோம் என்ற நிலைமைக்கு இருவரும் வந்து விட்டார்களாம். ஆறு வருடங்களுக்கு முன்பாகவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக இருந்தார்களாம். அப்போது ரஜினி மகன்களை காரணம் காட்டி சேர்த்து வைத்தாராம். இந்நிலையில் மீண்டும் மகன்களை காரணமாகக் கூறி அவர்களின் மனதை மாற்றியுள்ளார் ரஜினி. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சேர்வது நிரந்தரமானது இல்லை என பேசப்படுகின்றது.