Categories
உலக செய்திகள்

“நானும் போராடுவேன்”…. நான் திரும்பி வருவதற்கு இது தான் காரணம்…. உக்ரைனுக்காக பிரபல டென்னிஸ் வீரரின் குரல்…!!

ரஷ்ய தாக்குதலை எதிர்த்துப் தனது நாட்டு ராணுவத்துடன் இணைந்து போராடுவதாக  டென்னிஸ் வீரர் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் உக்ரைனில் விடிய விடிய சண்டை நடந்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் வான்தாக்குதலை அடையாளப் படுத்துவதற்கு இரவு நேரத்தில் இடைவிடாமல் சைரன்கள்  ஒலித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகின. இந்த வான்தாக்குதல் குறிப்பாக சுமி, பொல்டாவா, மரியு போல், கீவ் நகரங்களை மையமாக கொண்டு நடத்தப்பட்டது.

இதனையடுத்து ரஷ்ய கடற்படை கருங்கடலில் இருந்து உக்ரேன் முழுவதும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் பெலாரஸ் மற்றும் கிரிமியா நகரங்களிலும் வான்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று விடியும் பொழுதே தலைநகர் கீவ் பதற்றத்தின் உச்சத்தில் உறைந்து போனது. அங்கு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதுடன் சைரன்கள் ஒலித்த வண்ணமே இருந்தது. மேலும் ரஷ்ய படைகள் 50-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை தலைநகரில் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து கீவ் நகரில் தெருக்களில் துப்பாக்கி சுடுதல் சத்தம் மற்றும் முக்கிய மின் நிலையம் அருகே பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்புகள் கேட்டுக்கொண்டே இருந்தன. இந்நிலையில் ரஷ்யா கீவ் நகரில் உள்ள ஜூலியானி விமான நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்  படுகாயத்துடன் 6 பேர் மற்றும் 80 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். முதலில் ரஷ்யா கீவ் நகரில் உள்ள முக்கிய மாவட்டங்களுக்குள்  ஊடுருவும்  முயற்சியில் முதலில்  தோல்வி அடைந்தது. மேலும் கீவ் நகரை கைப்பற்ற ஏவுகணைத் தாக்குதல், துப்பாக்கி சண்டை என ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும் கூட தலைநகர் இன்னும் உக்கிரன் கட்டுப்பாட்டில் தான் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்ய தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டு ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிதுள்ளார். இவர் கடந்த 2020இல் ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றில் பங்கேற்றுள்ளார். ஸ்டாகோவ்ஸ்கி தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாக்க ஹங்கேரிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக ஸ்டாகோவ்ஸ்கி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் “எனக்கு ராணுவ அனுபவம் இல்லை. ஆனால் துப்பாக்கியை கையாளும் அனுபவம் உள்ளது. மேலும் எனது அப்பாவும் சகோதரனும் அறுவை சிகிச்சை நிபுணர்கள். ஆனால் அவர்கள் தற்பொழுது மன அழுத்தத்தில் உள்ளனர். இருப்பினும் நான் அவர்களிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி தைரியப் படுத்தி கொண்டு வருகிறேன். அவர்கள் எங்களது வீட்டில் அடித்தளத்தில் தங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் நான் நிச்சயமாக ரஷ்யாவிற்கு எதிராக சண்டை போடுவேன் என்றும் நான் திரும்பி வருவதற்கு முயற்சிக்கும் ஒரே காரணம் இது தான்” என்றும்  கூறியுள்ளார்.

Categories

Tech |