கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கண்டிராதித்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டி. தில்லை திருவாசகமணி. இவர் கருப்பசாமி அய்யனார் கோவில் பக்தர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை பெற்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் வளாகத்திற்குள் இரண்டு பெரிய மண்டபங்களைக் கட்டி உள்ளதாகவும் மண்டபத்தின் சாவியை ஒப்படைக்கவில்லை எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அறநிலையத்துறை அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து மண்டபங்கள் பூட்டி சீல் வைக்க கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி 9 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வரனை பண்டாரி நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அதில் தமிழக அரசு சார்பில் பக்தர்களும் பொதுமக்களும் நன்கொடை கொடுத்த நிதியில் கட்டப்பட்டதால் மண்டபத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் இந்த பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் நன்கொடை கொடுத்து கட்டடம் கட்ட சொன்னால் அனுமதிப்பீர்களா? என கேள்வி எழுப்பி உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுளார். அதன் பின் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.