உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் அருகிலுள்ள நாடுகள் வழியாக ஏர் இந்தியா விமானம் மூலமாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சகீர், சாந்தனு, செல்வபிரியா, ஹரிஹரசுதன், வைஷ்ணவிதேவி ஆகிய 5 மாணவர்கள் ருமேனியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மும்பை வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்து உள்ளனர் . அப்போது மாநில அமைச்சர் மஸ்தான் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார்.
இவ்வாறு தமிழகம் திரும்பிய 5 பேரும் மருத்துவ மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்டு இதுவரையிலும் 3 விமானங்கள் நாடு திரும்பியுள்ளது. இதில் முதலாவது விமானத்தில் 219 நபர்கள் நேற்று வந்தனர். அதன்பின் 2-வது விமானத்தில் 250 நபர்கள் ஞாயிற்றுக்கிழமை(இன்று) அதிகாலையில் வந்தனர். அதனை தொடந்து 3-வது விமானத்தில் மொத்தம் 240 நபர்கள் பிப்..27 (இன்று) காலை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.