Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு உதவும் எலான் மஸ்க்… இணையசேவை வழங்க முடிவு… வெளியான அறிவிப்பு…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு இணையசேவை அளிக்க முன்வந்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் தற்போதுவரை குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த, போரில் உக்ரைன் நாட்டிற்கு, இணைய சேவைகள் அழித்து வந்த நிறுவனங்களின் சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது.

இந்நிலையில், உக்ரைனின் துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ், உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கை குறிப்பிட்டு தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, எலான் மஸ்க் நீங்கள், செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கு விரும்புகிறீர்கள்.

ரஷ்யா, எங்கள் நாட்டை ஆக்கிரமிக்க விரும்புகிறது. நீங்கள் விண்வெளிக்கு ஏவுகணை அனுப்பும் நேரத்தில், ரஷ்யா எங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, தங்கள் நிறுவனத்தின் மூலமாக எங்களுக்கு இணைய சேவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், எலான் மஸ்க், உக்ரைன் நாட்டிற்கு இணையசேவை வழங்கிக்கொண்டிருக்கிறார்.

Categories

Tech |