உக்ரைன் போரை தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டதில் அமீரகம் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைன் நாட்டு மக்கள் போரின் காரணத்தினால் அருகிலுள்ள நாடுகளுக்கு எல்லைப் பகுதி வழியாக சென்று வருகின்றனர். இதனால் உக்ரைனில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீரகத்தின் நிரந்தரப் பிரதிநிதி லெனோவோ பங்கேற்றார். இந்த அவர் கூட்டத்தில் கூறியதாவது. “உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். மேலும் அப்பாவி மக்களை பாதுகாக்க இருதரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பின்பற்ற வேண்டும். இந்த கவுன்சிலில் உள்ள சக உறுப்பினர்களுடன் அமீரகமும் இணைந்து பகை தணித்து போரினை நிறுத்துவதற்கு உதவ தயாராக இருந்து வருகிறது. மேலும் இந்த நெருக்கடியை ராஜதந்திர முயற்சிகள் மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 11 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்நிலையில் இந்தியா, சீனா, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகித்தன. இதனால் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில் இந்த தீர்மானத்தை ரஷ்யா தனது மறுப்புரிமையை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.