உக்ரைனுக்காக போராட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளதாகவும், இதில் எங்களோடு கை கோருங்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, ரஷ்யாவில் உள்ள அனைவரும் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பேச தொடங்கி உள்ளார். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நம் நாட்டைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளோம். எனவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நாங்கள் எதிர்கொண்டு வெற்றிகரமாக முறியடித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புக்கான அமைப்புலிருந்து (SWIFT) ரஷ்யாவை துண்டிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இணைந்து ஏற்கனவே எங்களுக்கு முழு ஆதரவும் வழங்கியுள்ளது. மேலும் இந்த முடிவை ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளும் ஆதரிக்க தைரியமாக இருக்கும் என்று நான் முழுவதும் நம்புகிறேன். இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினிடம், அந்நாட்டு மக்கள் போரை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.
ரஷிய நாட்டு மக்களே இப்போருக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த எதிர்வினைக்கு நன்றி உள்ளவனாக இருப்போம் என்று கூறினார். மேலும் போர்க்கால நெருக்கடியை கருத்தில்கொண்டு, உக்ரேனிய வெளிநாட்டினர் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் உக்ரைனுக்கு திரும்பி வரக்கூடிய அனைவரும் உக்ரைன் நாட்டை பாதுகாக்க மீண்டும் வாருங்கள். ஏனெனில் இதனை கட்டியெழுப்ப நாம் அதிக பாடுபட வேண்டியதிருக்கும். இவ்வாறு உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.