உக்ரேன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ உறுதி அளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிரான தீர்மானதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முந்தினம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ரஷ்யா தனது மறுப்புரிமையை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. இதனை தொடர்ந்து நிபுணர்களிடம் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பேசியுள்ளார்.
அப்போது அவர் உக்ரேன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது. “நாம் ஒரு போதும் முயற்சியை கைவிடக் கூடாது என்றும் சமாதானத்துக்கு மற்றொரு வாய்ப்பு தர வேண்டும் என்றார். மேலும் வீரர்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டும். இதற்கிடையில் பேச்சு வார்த்தைக்கும், அமைதியின் பாதைக்கும் தலைவர்கள் திரும்ப வேண்டும். இதனை தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இதற்குத் தொடர்புடைய அனைவரும் மதிக்க வேண்டும். இந்நிலையில் உலகின் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.