தமிழகத்தில் 37 மாவட்டங்களில் பணிபுரியும் உதவி திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விளக்கவுரையை மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் குருசாமி, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கணேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.சித்ரா, அரசு ஊழியர் சங்க வேதாரண்யம் வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி, புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பிரச்சார செயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அதேபோல் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரையை நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் ஆற்றினார். முடிவில் நன்றியுரையை மாவட்ட பொருளாளர் அந்துவஞ்சேரல் ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வீ.உதயகுமார், எம்.மேகநாதன், கே.இராஜூ, மாவட்ட தணிக்கையாளர் கே.ரவிச்சந்திரன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.