தேர்தல் பிரச்சாரத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம் அணிந்துகொள்ள திணறும் வீடியோ சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5 ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சார மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்கை போட்டுக்கொள்ள சிரமப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அந்த முகத்தில் போட்டுக்கொள்ள படாதபாடு பட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தில் மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சி பிரமுகர் ஒருவர் அந்த கட்சியின் எம்.பி. தாயிர்யஷீல் மாணே பேசிக்கொண்டிருக்கும்போது அதற்கு பின்னால் நின்றபடிஅந்த நபர் இந்த செயலை செய்துள்ளார். இதன் காரணமாக எம்.பி.யின் தேர்தல் பிரச்சாரத்தை கவனித்ததை விட அவர்களை விட அவருக்குப் பின்னால் நின்று முக கவசம் அணிய கஷ்டப்படும் நபரை மக்கள் வெகுவாக பார்த்து ரசித்தனர். இறுதியில் அவர் கஷ்டப்படுவதை பார்த்து மற்றொரு நபர் அவருக்கு உதவி செய்து மாஸ்க்கை மாட்டியுள்ளார்.
w8 for it…! 😁 pic.twitter.com/uG7gkaNLBg
— Faijal Khan (@faijalkhantroll) February 24, 2022