வலிமை படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளதால் படக்குழு சில காட்சிகளை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பல இடங்களில் புதிய வசூல் சாதனை முறியடித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 30 பிளஸ் கோடிகள் வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சிகளை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பல தரப்பினரிடமிருந்து வலிமை படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழு வலிமை படத்தின் தமிழ் வெர்சனிலிருந்து இருந்து 12 நிமிட காட்சியை நீக்கி உள்ளார்களாம். இதனை தொடர்ந்து இப்படத்தின் நியூ வர்ஷன் இன்று திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.