உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் பெரிய அளவிலான போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரேனின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். மேலும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் போதிய அளவில் போர் தளவாடங்கள் பிரான்சிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.