Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி மற்றும் மகளுக்கு கத்திக்குத்து…. போலீஸ்காரரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ்காரர் தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பஜார் தெருவில் போலீஸ் ஏட்டான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பத்மினி, கார்த்திகா, ராஜஸ்ரீ என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜேந்திரன் பூர்ணிமாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

அப்போது தடுக்க வந்த பத்மினிக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனையடுத்து தாய்-மகள் இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில் ராஜேந்திரன் நடந்தவற்றை கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |