உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவிற்கு சிரியா ஆதரவு தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருவது, உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் சிரிய அதிபர் பஷார் ஆசாத், இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று கலந்துரையாடியுள்ளனர்.
அப்போது, டான்பாஸ் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு உக்ரைன் நாட்டில், ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதை சிரியாவின் அதிபர் ஆதரித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் செயல்பாட்டை அவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.