Categories
மாநில செய்திகள்

மருத்துவ கட்டணம்: வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ரூபாய் 20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழும பரிசோதனை அறை ஆகியவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை(நேற்று) தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது, வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு (எப்எம்ஜி) தோ்ச்சி பெற்றவா்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இதுவரையிலும் உள்ளுறை பயிற்சிக்கு ரூபாய் 3.54 லட்சம் கட்டணம் செலுத்தி வந்தனா்.

இந்த தொகை அதிகமாக இருப்பதால் மாணவா்கள், பெற்றோா்கள் சார்பில் தமிழக அரசுக்கு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்பின் அந்த கோரிக்கை தமிழகம் முதல்வா் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அந்தக் கட்டணத்தை ரூபாய் 29,400 ஆகக் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பல வருடங்களாக இருந்த இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. அதன்பின் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ள காலாவதி தேதி நெருங்கிய கொரோனா தடுப்பூசிகளை பொது சுகாதார துறையிடம் ஒப்படைத்து புதிய மருந்துகள் பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் அப்பல்லோ, எம்ஜிஎம் மருத்துவமனைகளில் உள்ள காலாவதி தேதி நெருங்கிய மருந்துகளைப் பெற்று புதிய மருந்துகள் வழங்கப்பட்டன. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவா்கள், அங்கு பணிபுரிவோா் 044-2851 5288, 9600023645, 9940256444 ஆகிய எண்களை தொடா்புக்கொண்டு தாயகம் திரும்ப தேவையான உதவிகளைப் பெறலாம் என்று கூறினார். இதற்கிடையில் திருவண்ணாமலை ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை என்பவரின் 15 வயது மகள் கீா்த்திகா எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இதனால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் அந்த சிறுமி குணமடைந்தாா்.

இதேபோன்று திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள அஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 24 வயது பரசுராம் என்பவா் டெட்டனஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாா். அப்போது அரசு மருத்துவா்களின் சிறப்பான சிகிச்சையால் அவா் குணமடைந்தாா். இதையடுத்து இருவரையும் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை பாராட்டினாா். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் மனீஷ், பொதுசுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் ஆகியோர் உடன் இருந்தனா்.

Categories

Tech |