Categories
உலக செய்திகள்

பொருளாதார பேரழிவை சந்திக்கும்….போரை நிறுத்த வில்லையென்றால்…. ஐரோப்பிய நாடுகளின் திட்டம்….!!!

ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷ்யாவை தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1973-ஆம் ஆண்டு ஷிப்ட் என்ற அமைப்பு பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை  சுலபமாக நடைமுறைப்படுத்துகிறது. மேலும் ஷிப்ட் அமைப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளது. இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையான நிதி தொகை தொடர்பு கொள்வதற்கான சமூகமாகும். மேலும் இந்த அமைப்பு பணம் எப்போது அனுப்பப்பட்டுள்ளது, பணம் கணக்கில் எப்போது வந்து சேர்ந்தது உள்ளிட்ட தகவல்களை பயனாளர்களுக்கு அனுப்புகிறது.

இந்த அமைப்பை உலக அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் பயன்படுத்தி பண பரிவர்த்தனையில்  ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த அமைப்பில் இருந்து ரஷ்யாவை தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தடை விதிக்கப்படும் பட்சத்தில் ரஷியா வெளிநாடுகள், பெரு நிறுவனங்களிடையே பண பரிவர்த்தனையில் ஈடுபடுவது நிறுத்தப்படும். எனவே ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு பேரிடியாக இருக்கும்.

இந்த தடை விதிக்கப் படும் பட்சத்தில் ரஷ்யா, சீனாவின் உதவியை நாடலாம். மேலும் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பணத்தின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை ரஷ்யா மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஷிப்ட் அமைப்பிலிருந்து ரஷ்யாவை  நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. இதனால் ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்படும் பட்சத்தில் ரஷ்யா மிகப் பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |