ரோகினி திரையரங்கில் படம் பார்க்க விரும்பிய ஷாலினி, அஜித்குமார் ரசிகர்களின் செய்கையினால் அந்த ஆசையை விட்டுவிட்டாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வலிமை ரிலீஸாகியது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படமானது நான்கு மொழிகளில் மாஸாக கிளாஸாக வெளியாகியது. இத்திரைப்படத்தைப் பார்க்க படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோயினும் ரோகினி திரையரங்குக்கு வந்துள்ளனர். இவர்களைப்பார்த்த ரசிகர்கள் அவர்களின் கார் முழுவதும் தயிர் மற்றும் பாலால் அபிஷேகம் செய்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படத்தை அஜித்தின் மனைவியான ஷாலினி, ரோகினி திரையரங்கில் பார்க்க விரும்பினார். ஆனால் ரசிகர்களின் இச்செயல்களால் ஷாலினி இத்திரையரங்கில் படம் பார்க்கும் ஆசையை விட்டுவிட்டாராம்.